Ini Naan Urangattum / இனி நான் உறங்கட்டும்
-
₹260
- SKU: SA0021
- ISBN: 9788126010843
- Translator: Aa.Madhavan
- Author: P.K.Balakrishnan
- Language: Tamil
- Pages: 290
- Availability: In Stock
இனி நான் உறங்கட்டும் என்னும் இந்நாவல்
, மலையாள நாவலாகிய 'இனி நான் உறங்கட்டே' என்பதன் தமிழாக்கம் ஆகும். வியாசபாரதத்தை அடிப்படையாகக்
கொண்டு பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் தன் கற்பனையில் மறு உருவாக்கம்
செய்துள்ளார் ஆசிரியர் பி.கே. பாலகிருஷ்ணன். திரௌபதியின் பாத்திரத்தைப் புதிய
சிந்தனையில் மாற்றியமைத்து அதன் வழியே கர்ணன் கதையைப் புதுமுறையில்
வழங்கியுள்ளார்.
பி.கே. பாலகிருஷ்ணன் (1926 - 1991): தம் படிப்பைத் துறந்து விடுதலைப் போரில் பங்கேற்ற விடுதலை
வீரர். பல நாவல்களையும், திறனாய்வு நூல்களையும் படைத்தவர். இந்நாவல் 1978ஆம் ஆண்டு வயலார் விருது பெற்றது.
ஆ. மாதவன்: திருவனந்தபுரத்திலிருந்து தமிழ்
வளர்க்கும் நாவல் - சிறுகதையாசிரியர். ‘புனலும் மணலும்’ இவரது சிறந்த நாவல். 'இலக்கியச் சுவடுகள்' என்னும் கட்டுரைத் தொகுப்பிற்காக 2015ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். நாஞ்சில்
நறுமணமும் வட்டார வழக்கும் இவரது சிறப்பு. இம்மொழிபெயர்ப்பிலும் நடைநலமும்,
சொல்லினிமையும், திறமும் மிளிர்கின்றன.





