Thamas / தமஸ்



  • ₹345

  • SKU: SA0003
  • ISBN: 9788126016566
  • Translator: Venkat Swaminathan
  • Author: Bhishma Sahni
  • Language: Tamil
  • Pages: 420
  • Availability: In Stock

தமஸ் (இருட்டு): இந்நாவல் 1973இல் வெளியாகி மிகுந்த பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. 1975இல் ஹிந்தி மொழியில் சிறந்த படைப்பிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது. கோவிந்த் நிஹலானி என்னும் கலைத்திறன் வாய்ந்த இயக்குனரால் தொலைக்காட்சித் தொடராக்கப்பட்டு, தேசிய அளவில் புகழ் பெற்றது. பின்னர் பீஷ்ம சாஹ்னியாலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2001இல் பிரசுரமாகியது.

 

சுதந்திரத்திற்கு முன் பஞ்சாபில் உள்ள ஒரு ஊரில் நிகழ்ந்த மதக் கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல் ஆங்கிலேய அதிகாரிகள், இந்தியர்களின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்னும் கபட வேடத்தில் இரு மதத்தினரிடையேயும் பகைமையை வளர்க்கின்றனர். அதன் விளைவாக ஏற்படும் கலவரங்களை, கொலை, கொள்ளைகளை எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது ஆங்கிலேய அரசாங்கம். இக்கோர தாண்டவத்தின் இருளிலும் மனிதப் பண்புகளை இழக்காத ஏழை எளிய மக்கள் சிறிய அகல்விளக்குகளாக ஒளி வீசுகிறார்கள்.

 

பீஷ்ம சாஹ்னி: பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் பிறந்த இவர், தம் வீட்டிலேயே ஹிந்தியும் சமஸ்கிருதமும் கற்றார். பின்னர் பள்ளியில் சேர்ந்ததும் உருதுவும் ஆங்கிலமும் கற்றார். லாகூர் அரசினர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். ஹிந்தி மொழியில் மிகச் சிறந்த நாவலாசிரியராகவும், திறமிக்க எழுத்தாளராகவும் விளங்கியவர். சாகித்திய அகாதெமி விருதும், பஞ்சாப் அரசின் விருதும் பெற்றவர்.

 

வெங்கட் சுவாமிநாதன்: இந்நாவலை ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் சமூகம், பண்பாடு இவற்றில் ஏற்படும் நிலை மாற்றங்கள் குறித்து எழுதியவர். இலக்கியம், நாடகம், திரைப்படம், நாட்டியம், ஓவியம், சங்கீதம் எனப் பல கலைகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்த விமர்சகர்

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up