Thirkottoor Novelkal / திற்கோட்டூர் நாவல்கள்
-
₹175
- SKU: SA0039
- ISBN: 9788126042005
- Translator: Thoppil Mohamed Meeran
- Author: U.A. Khader
- Language: Tamil
- Pages: 300
- Availability: In Stock
யு.எ.காதர் 1935ல் பர்மாவில்
பிறந்தார். தாயார் பர்மாவிலுள்ள 'மாமதி'. தந்தையார் மலையாளியான மொய்தீன் குட்டி ஹாஜி.
இவரது இவரது ஏழாவது வயதில் இவர் கேரளாவுக்கு வந்தார். கொயிலாண்டியில் உயர்நிலை
கல்வி கற்றார். 1960ல்
சுகாதாரத்துறையில் வேலை. 48 நூல்களின்
ஆசிரியர். பரிசுகள் பல பெற்றுள்ளார். 2009ல் இந்நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. 1984ல் 'திற்கோட்டூர் பெருமை'க்கு கேரளா
சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. திற்கோட்டூர் பெருமை, திற்கோட்டூர் கதைகள், காதல் கதைகள், சங்கிலி, ஒரு படகாளி பெண்ணின் சரிதம் முதலியன இவருடைய
முக்கிய நூல்கள். கோழிக்கோட்டில் வசித்து வருகிறார்.
8 நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பான 'திற்கோட்டூர் நாவல்கள்' 'திற்கோட்டூர்'
என்ற கிராமத்தின்
பின்னணியில் எழுதப்பட்டது. தற்போதைய நவீனப் போக்குகளிலிருந்து விலகி, அவரது கிராம மக்களின் வாய் மொழியில் மக்களின்
நம்பிக்கை, பழக்க வழக்கங்கள்
வடக்கு மலபாரில் நடைபெறும் கோயில் கொடை முதலியவற்றை மிகவும் தத்ரூபமாகக் கற்பனை
கலக்காமல் எழுதி வருகிறார். யு.எ.காதரின் இலக்கியப் படைப்புகள் வரலாற்று, மொழிரீதியாகப் பெரும் சேவை புரிகின்றன.
வாசகர்களுக்குப் பழைமையான கேரளத்தின் உண்மையான சித்திரம் இவற்றின் மூலம்
கிடைக்கிறது.
தோப்பில் முகம்மது மீரான் (பி.1944) குமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணம் இவரது சொந்த ஊர். 5 நாவல்கள், 6 சிறுகதைகள் தொகுதிகள் படைத்துள்ளார். 1997ல் சாகித்திய அகாதெமி விருது 'சாய்வு நாற்காலி நாவலுக்குக் கிடைத்தது.
ஆங்கிலம், ஜெர்மன் உட்பட பல
இந்திய மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்திய
அகாதெமிக்காக பல படைப்புகளை
மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.





