Kadaisi Puthirpaathai / கடைசிப் புதிர்பாதை



  • ₹325

  • SKU: SA0055
  • ISBN: 9789361837937
  • Translator: G.Kuppusamy
  • Author: Arun Joshi
  • Language: Tamil
  • Pages: 256
  • Availability: In Stock

மிகப் பெரிய செல்வந்தனாக இருக்கும் தொழிலதிபர் சோம் பாஸ்கருக்கு எதிலும் மனத்திருப்தி ஏற்படுவதில்லை. அமைதியிழந்து எதையோ தேடிக்கொண்டே இருக்கிறான். "எனக்கு வேண்டும் வேண்டும் " என்ற ஒலம் அவனுக்குள் எழுந்து துரத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு மர்மப் பெண்ணின் மீது மோகம் கொண்டு தனது தொழிலையே சீரழித்துக் கொள்கிறான். நவீன மனிதன் தனது வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அலைச்சலை, அவன் தனது அடையாளங்களை இழப்பதை அருண் ஜோஷி மிகவும் காத்திரமாக வடித்துக் காட்டுகிறார், சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்நாவலில்.

அருண் ஜோஷி (1939 - 1993) : சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய ஆங்கில இலக்கியத்தின் தனித்துவமான குரல் என்று புகழ் பெற்றவர். வாரணாசியில் பிறந்த இவர் பொறியியலில் உயர்கல்வியை அமெரிக்காவில் முடித்தவர். 1982ஆம் ஆண்டில் 'தி லாஸ்ட் லாபிரிந்த்' நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றார். இவருடைய இதர நாவல்கள்: தி ஃபாரினர், தி ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆஃப் பில்லி பிஸ்வாஸ், தி அப்பிரண்டிஸ், தி சிட்டி அண்ட் த ரிவர் ஆகியவை. அவரது படைப்புகள், நவீன மனிதனின் அந்நியத்தனம், ஒழுக்கச் சிக்கல், சுதந்திரம் மற்றும் அர்த்தத் தேடல் ஆகியவற்றின் பிரதிபலிப்புகளாகத் திகழ்கின்றன. அருண் ஜோஷியின் எழுத்து, நம் சொந்த உள்மனப் பாழியில் ஒலிக்கும் எதிரொலியாக நம்மைத் தொட்டுச் செல்கிறது.

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி (பி: 1962) : கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நவீன இலக்கியங்களை மொழிபெயர்த்துவருகிறார். தமிழக அரசின் விருது உட்பட பல அயல்நாட்டு விருதுகளையும் பெற்றுள்ள இவர் ஓரான் பாமுக், ஜான் பான்வில், தாக் ஸூல்ஸ்தாத், டக்லஸ் ஸ்டூவர்ட், ஆல்டஸ் ஹக்ஸ்லி, அருந்ததி ராய், அருண் ஜோஷி உள்ளிட்ட பல முக்கியமான நாவலாசிரியர்களின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்


Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up