Sufi Meignani Gunangudi Masthan Sahib / சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு
-
₹50
- SKU: SA0067
- ISBN: 9788126031610
- Author: U.Alibava
- Language: Tamil
- Pages: 144
- Availability: In Stock
சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1835): இராமநாதபுரம் மாவட்டம் குணங்குடியைச் சார்ந்த இவர் இஸ்லாமியத் தமிழ்த் தத்துவ இலக்கியப் படைப்பாளர்களுள் தலை சிறந்தவர். இஸ்லாமியத் தமிழ்ச் சித்தர், சூஃபி ஞானி, ஞானக் கடல், ஞானக் கருவூலம், ஞானக் களஞ்சியம், ஞானச் சித்தர், ஞான வள்ளல், ஞான மகான் என்றெல்லாம் போற்றப்படும் இவர் மெய்ஞ்ஞானப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். சர்வ சமய சமரச் நோக்குடையவர். இஸ்லாமியத் தாயுமானவர். சாதி, மத, இன, மொழி பேதமின்றி எல்லோரையும் நேசித்து வாழ்ந்த இவருடைய படைப்புகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனும் எல்லையைக் கடந்து இன்றும் எல்லோர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் தன்மையுடன் திகழ்கின்றன. பரிபாஷைகளும் வழக்குச் சொற்களும் பழமொழிகளும் நாயக நாயகி பாவமும் இசையுடன் கூடிய சந்த நயமும் பாடல்களுக்கு இவருடைய மெருகூட்டுகின்றன. இவரது பாடல்கள் அனைத்தும் சூஃபிஞானத்தின் பிழிவுகள். அவை எங்கும் எதிலும் இறைவனையும் சூஃபித்துவத்தையுமே காண்கின்றன. சமுதாயத்தைப் பேசும் போதும், சமரசத்தைப் பேசும் போதும் சூஃபித்துவத்தைப் பேசும் குணங்குடியார் பாடல்களின் அடிநாதம் சமய சமுதாய சமரச சூஃபித்துவமே.
உ.அலிபாவா: முதுபெரும் புகழுடைய திருச்சிராப்பள்ளி ஜமால் முகம்மது கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர் தமிழ் இலக்கியத்தின் மீதும், இஸ்லாமிய இலக்கியத்தின் மீதும் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். 'தமிழில் இஸ்லாமியச் சதக இலக்கியங்கள்' எனும் இவரது ஆய்வு நூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பேராசிரியர் நா.வானமாமலை ஆராய்ச்சி விருதினைப் பெற்றுள்ளது.



