Sufiyism / சூஃபியிசம்



  • ₹310

  • SKU: GB001
  • ISBN: 9789389766547
  • Translator: Meera, மீரா
  • Author: Dr.Faridha Gaanam, Dr.ஃபரீதா கானம்
  • Language: Tamil
  • Pages: 312
  • Availability: 2-3 Days

* சூஃபியிசம் ஓர் எளிய கையேடு' என்னும் நூல் முனைவர் ஃபரீதா கானம் எழுதியது. மொழியாக்கம் மீரா. இந்நூல் சூஃபி மரபைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆனால் மிக முழுமையான அறிமுகம்.

* நான் வழக்கமாக மொழியாக்க நூல்களைப் பரிந்துரைப்பதில்லை. மொழியாக்கங்கள் படிக்கவே முடியாதபடிச் செய்யப்படுவது வழக்கம். இந்நூல் மிகச்சிறப்பான நடையுடன் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

* சூஃபி என்னும் சொல் திண்ணை, கம்பிளி, வரிசை என்னும் வேறுவேறு சொற்களில் இருந்து உருவாகி வந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

* அரேபியாவுக்கு வெளியே பாரசீகத்திலும் கீழைநாடுகளிலும்தான் இது ஒரு பெரிய இயக்கமாக உருவெடுத்தது. நபியின் திண்ணைத்தோழர்கள் என்னும் மாணவர் அணி அவர் வாழ்வுடனேயே பிற உடைமைகளோ, பிற வாழ்க்கையோ இல்லாமல் பயணித்தது. அவர்களிடமிருந்தே சூஃபி என்னும் மனநிலை உருவாகி வந்தது.

* சூஃபி இயக்கம் கீழைநாட்டில் மிகப்பெரிய பண்பாட்டுச் செல்வாக்கைச் செலுத்திய ஒன்று. ஆன்மிக நோக்கம் கொண்டு அதை அணுகலாம். மதநம்பிக்கை சார்ந்தும் அணுகலாம். இவை ஏதும் இல்லாதவர்களுக்குக் கூட அவ்வியக்கம் முக்கியமான ஒன்று.

* அதன் மூன்று தளங்கள் முக்கியமானவை. அறிவார்ந்ததும் தத்துவம் சார்ந்ததுமானதுமான முதற்தளம் கீழைச்சிந்தனையை, இந்திய சிந்தனையை அறிய முயலும் எவருக்கும் தவிர்க்கமுடியாது. அதன் பங்களிப்பின்றி கீழைச்சிந்தனை என்பதே இல்லை. இரண்டாவது தளம், உணர்வுபூர்வமானது. கலை சார்ந்தது. வேறு எதன்பொருட்டு இல்லை என்றாலும் சூஃபி இசையின் பொருட்டாவது அதை ஓர் அறிவியக்கவாதி அறிந்திருக்கவேண்டும். மூன்றாவது தளம் அதன் மெய்யியல், மெய்ஞானத்தளம்.

- - ஜெயமோகன்

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up