Oorundu Kaani Illen / ஊருண்டு காணி இல்லேன்
-
₹300
- SKU: VIJ002
- ISBN: 9788197763823
- Author: Nanjil Nadan
- Language: Tamil
- Pages: 296
- Availability: In Stock
மொழியைப் புதிய பொருள் நிறைந்த ஆயிரம் அர்த்தங்களோடு புதுப்பித்துப் பொலிவூட்டுபவர் திரு. நாஞ்சில் நாடன்.
எழுத்தாளர்கள் உலகின் அனைத்துத் துயரங்களையும் உருமாற்றத் தெரிந்தவர்கள். மொழியை வெளிச்சம் போலப் பரவச் செய்பவர்கள். அதைத்தான் இந்த 'ஊருண்டு காணி இல்லேன்' நூல் முழுக்கச் செய்திருக்கிறார் மதிப்பிற்குரிய நம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
ஆழ்மன ரசனையே மொழியை மதிப்பிடச் சரியான அளவுகோல் என்பதைப் புரிந்தவர்கள் நம் வாசகர்கள். 'தாய் மொழியை எந்த ஒரு நிலையிலும் கைவிடாதீர்கள். எந்தச் சொற்களோடு நீங்கள் வளர்ந்தீர்களோ, அந்தச் சொற்களில் எல்லாத் திருநலங்களும் உள்ளன' என்பதை உறுதிபடச் சொல்லுகிற இந்நூலைத் தமிழ்ப்பெருமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள் என்கிற உற்சாகத்தோடு எங்கள் விஜயா பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ச்சி கொள்கிறது.
பதிப்பகத்தார்
