Vaazhvile Oru Murai - Anubava Kathaikal / வாழ்விலே ஒரு முறை
-
₹180
- SKU: VP2330
- ISBN: 9789392379697
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 132
- Availability: In Stock
துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு, மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள் வாசகரிடத்தில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன. மறக்க முடியாத அனுபவத்தைத் தருகின்றன. வாழ்க்கைப் பார்வையை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகின்றன. மிகவும் நேரடியான, எளிமையான மொழியில், மிகச் சாதாரணமான நிகழ்வுகளை அதிராமல் சொல்லிச் செல்வதன் மூலம் அசோகமித்திரன் இதைச் சாதிக்கிறார். தன் அனுபவங்களைக் கதைப்பொருளாக்குவதிலும் அவற்றைக் கதைகளாக்குவதிலும் விளக்க இயலாத மிக நுட்பமான ரசவாதம் அவரிடத்தில் செயல்படுகிறது. அதுவே அசோகமித்திரனின் கலை. குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அன்றாட நிகழ்வுகளையும் சாமானிய மனிதர்களையும் வைத்துக்கொண்டு அசோகமித்திரன் ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த அசோகமித்திரனின் முதல் தொகுப்பிலேயே அவருடைய கலை மேதமை வெளிப்பட்டுவிட்டது. இலக்கிய வாசகர்கள் அசோகமித்திரனை எந்தக் காரணங்களுக்காகக் கொண்டாடுகிறார்களோ அந்தக் காரணங்களை அவருடைய முதல் தொகுப்பிலுள்ள கதைகளிலேயே காண முடியும். வாழ்விலே ஒரு முறை என்னும் இந்தத் தொகுப்பு அசோகமித்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற முறையில் மட்டுமல்ல; அவருடைய ஆகச் சிறந்த கதைகளில் சிலவற்றைக் கொண்ட தொகுப்பு என்ற முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.







